குறும்படம் எடுப்பது எப்படி? - பயிற்சிப்பட்டறை- ஏற்காடு

24, 25, 26 செப்டம்பர் 2021.

மூன்று நாட்கள் நடந்த பயிற்சிப்பட்டறை சிறப்பாக நிறைவுற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தார்கள். பலத்துறைகளில் பணிபுரிபவர்கள் என்ற போதும், எல்லோருக்கும் திரைப்படம், குறும்படம் குறித்து ஆர்வம் இருந்தது. மிகுந்த சிரத்தையோடு கற்றுக்கொண்டார்கள்.

முதல் நாள்… கதை, திரைக்கதை, காட்சிகள், ஷாட்டுகளை பிரிப்பது பற்றிய விளக்கங்கள் மற்றும் ஒளி, ஒளியமைப்புக்குறித்த வகுப்பாக துவங்கியது பயிற்சிப்பட்டறை. பிறகு மாலையில் துவங்கி இரவு 9 மணிவரை காட்சிகளை படம்பிடித்தோம். இரவும் படத்தொகுப்பு செய்யப்பட்டது.

இரண்டாம் நாள் காலை, முந்தைய நாள் எடுத்த காட்சிகளை படத்தொகுப்பு செய்ததைப் பார்த்துவிட்டு, அன்றைய பொழுது முழுவதும் படபிடிப்பு நாளா மாற்றினோம். அன்று இரவு, அதுவரை எடுத்த காட்சிகளை அனைவரும் அமர்ந்து படத்தொகுப்பு செய்துப்பார்த்தோம். இரவு 11 மணி வரை சென்றபோதும், அத்துணை பேரும் ஆர்வமாக கலந்துக்கொண்டதை கண்டு, மனம் நிறைந்தது.

மூன்றாம் நாள்… விடியற்காலையிலேயே (6am) படப்பிடிப்பை துவங்கிவிட்டோம். பிறகுதான் காலை உணவே உண்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், கலந்துக்கொண்டவர்களின் ஆர்வத்தையும், ஒத்துழைப்பையும். அன்றைய பொழுது முழுவதையும் படம் பிடிப்பதற்கே பயன்படுத்தினோம். இடையில் மதிய உணவிற்கு பிறகு கொஞ்சம் நேரம், Lumix Cameras, Godox Lights பற்றிய சிறிய அறிமுகத்தை ஏற்படுத்திக்க்கொண்டோம். 

கூட்டாகச் சேர்ந்து ஒரு ‘குறும்படத்தை’ எடுத்திருக்கிறோம். பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டவர்களே நடித்தும் இருக்கிறார்கள். விரைவில் அக்குறும்படம் வெளியாகும். 


கலந்துக்கொண்ட அத்துணை நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும்…!Camera: Lumix S1H 

Lens: Lumix Lens

Lights: Godox Continuous Light (Video Lights) 


Godox Lights Used:

Godox LED500 & 1000 Video Lights with Battery

Godox LEDP260C 

Godox SZ150R 

Godox Silent LED Video Light UL150 with QR-P 

Godox TUBE LIGHT TL60

Godox RGB LED Light Stick LC500R

Godox LED500 C 

Godox M1 RGB Light

Godox R1 RGB Light with units of AK-R1 

Godox LC500R
Our Lighting Partner

SHARE THIS PAGE!

CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922


Name: Gnanam Subramanian

Email: usgnanam@gmail.com

Phone: +91 99200 29901