புகைப்படக்காரர், திருமண விடியோகிராஃபர், சினிமாவில் ஒளிப்பதிவாளராக விரும்புபவர், இயக்குநராக தன்னை தயார்படுத்திக் கொள்பவர், குறும்பட இயக்குநர், குறும்பட ஒளிப்பதிவாளர், யூடியூப் விடியோக்காரர் - இதில் நீங்களும் ஒருவர் எனில்.. இப்பயிற்சி வகுப்பு உங்களுக்குத்தான். தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள்.
புகைப்படத்திற்கும், ஒளிப்பதிவிற்கும் ஆதாரம் எது?
ஒளிதான்.
எனில், அவ்வொளியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ள வேண்டாமா?
இன்றையத்தேதியில், சினிமாவிற்கும், திருமண ஒளிப்பதிவுற்குமிடையே இருந்த இடைவெளி குறைந்து விட்டது. சினிமாவைப்போல, திருமண விடியோக்களை எடுக்க முடியும். எடுக்க வேண்டும்.
நிகழ்வுகளை, வெறுமனே பதிவு செய்த காலம் மலையேறிவிட்டது. அதில் கலை நுணுக்கம் வெளிப்பட வேண்டும். ஒரு சினிமாப்பாடலைப்போல பல்வேறு அம்சங்கள் அதிலிருக்க வேண்டும். சினிமாவின் கதாநாயகன், கதாநாயகிப்போல தாங்களும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தம்பதியரும் விரும்புகின்றனர். பிரதானமாக அழகு வெளிப்பட வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமும்.
அதற்கு முதல் படி, புகைப்படங்களில், விடியோக்களில் ‘ஒளியமைப்பு’ சரியாக, முறையாக இருக்கவேண்டும்.
ஒளியைப் புரிந்துக்கொள்ள,அதன் quantity, quality, Colour பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒளியை முறையாக பயன்படுத்துவதற்கும் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான், நமக்கேற்றப்படி ஒளியைப் பயன்படுத்த முடியும். இதுவே புகைப்படத்திற்கும், ஒளிப்பதிவிற்கும் அடிப்படை.
இப்பயிற்சிப்பட்டறை, ஒளி மற்றும் ஒளியமைப்புப் பற்றிய புரிதலை, செயல்படுத்தும் ஆற்றலை உங்களுக்கு ஏற்படுத்தும்.
Camera: Lumix S1H
Lights: Godox Continuous Light (Video Lights)
Model: Arishkumar
Godox Lights Used:
Godox SL200 W
Godox SL150 W
Godox SL200 Y
Godox LED500 C
Godox SLB 60 W
Soft-boxes:
Godox Octa GUE80
Godox SB US6090
Godox Para P90H
Godox Para P90G(Grid)
SHARE THIS PAGE!