ஒளிப்பதிவு தொழில்நுட்பம் குறித்த நூல்
புத்தகத்தின் தலைப்பே கருப்பொருளை சொல்கிறது. ஒளி என்பது மொழிதான். அது ஒரு உலகமொழி. உங்களுக்கு இந்த உலக மொழியை கற்றுக்கொள்ள எளிய தமிழில் விளக்குகிறது இந்த நூல். ஒளிப்பதிவு பற்றி கற்க நீங்கள் ஒரு அதிமேதாவியாக இருக்கவேண்டும் என்பதில்லை, வாசிக்கும் அறிவும் ஆர்வமும் இருந்தாலே போதும் என்ற நம்பிக்கையூட்டுகிறது ஒளி என்னும் மொழி. நூலாசிரியரின் மொழியில் சொல்லவேண்டும் என்றால் திரைப்படம் குறித்து பல செய்திகளை பகிர்ந்துகொள்ள இந்நூல் முயன்றாலும் முதன்மையான நோக்கம் ஒளிப்பதிவு மட்டுமே. பிலிம் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு உலக திரைத்துறை மாறிவரும் சூழலில் இந்த தொழில்நுட்பங்களுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள், சாதக பாதகங்கள், தற்போதைய நவீன கருவிகள், அவை இயங்கும் முறைகள், ஒளிப்பதிவு குறித்த பிற தகவலகள் என முழுக்க முழுக்க தொழில்நுட்பம் விரவி கிடக்கிறது. ஒளிப்பதிவை கற்கவேண்டும் என விரும்பு அனைவருக்கும் இந்நூல் ஒரு நல்ல ஆரம்ப விதையாக இருக்கும்.
போர்களை அடிப்படையாக கொண்ட படங்கள் பற்றிய நூல்
சினிமா என்றாலே பிரமாண்டம். நம் வாழ்வியல் நிகழ்வுகள் அகன்ற திரையில் விவரித்து நம் அறிவை ஒரு விரிவைந்த நிலைக்கு அழைத்து செல்லும் உணர்வோவியம். சினிமா பல கருக்களை பேசினாலும் அதற்குள் அது பேசப்படும் நிலத்தின் இன கலாச்சார உணர்வுகளை பேசும்போதுதான் அது அந்த மண்ணின் சினிமாவாகிறது. அவ்வாறு இன மற்றும் கலாச்சார அடையாளங்களை காக்கவே உலகெங்கிலும் பல போர்கள் நிகழ்ந்துள்ளன. அவ்வகையில் நிகழ்ந்த போர்கள் இலக்கியமாக, ஓவியமாக, நாடகமாக இன்னும் பல கலைவடிவமாக உருவெடுத்திருக்கிறது. சினிமா எனும் தொழில்நுட்பம் வந்த பின்னர் போர் நிகழ்வுகளில் ஒரு பிரமாண்டமும் உயிரோட்டமும் கலந்து நம்மை அந்த காலக்கட்டத்திற்கு அழைத்து சென்று ஒரு அதிர்வை ஏற்படுத்துகின்றன.இவ்வாறு போர்களை அடிப்படையாக கொண்ட சினிமாக்களையும். அதன் கதை நாயகர்கள், சூழல்கள் என மிக முக்கியமான போர்த்திரைகளை பற்றி விவாதிக்கிறது இந்நூல். பிரமாண்டமான சினிமாக்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த போர்திரை நூல் நிச்சயம் உதவும்.
கடந்ததும் கற்றதும்
ஒரு கட்டத்தில் நாம் மாணவர்களாக இருக்கிறோம். பின்னர் நாம் பயின்ற துறையின் விற்பன்னர்களாகிறோம். நமது பயணமே நாளைவில் அடுத்துவரும் தலைமுறைக்கு பாதையாக கூட மாறக்கூடும். நாம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் பேருதவியானது நாம் கடந்துவந்த பாதையை ஒளிவு மறைவின்று தெரிவிப்பது. இதில் வருங்கால தலைமுறைக்கு பாடங்களும் இருக்கும், அனுபவங்களும் கிடைக்கும். இவ்வாறு விஜய் ஆம்ஸ்ட்ராங் திரைத்துறையில் துவக்கம் முதல் தாம் கடந்துவந்த பாதையை பகிர்ந்துகொள்கிறார். இந்நூலில், ஒரு ஒளிப்பதிவாளனுக்கு அறிமுகமாகி இருக்க வேண்டிய, ஓவியம், காமிக்ஸ், இசை, திரைப்படங்கள், புகைப்படங்கள் குறித்த ரசனை பற்றி பேசி இருக்கிறார. தொழில்நுட்ப கலைஞர்களை மட்டுமல்லாது, பொது வாசகனையும் இப்புத்தகம் கவரும். கமலஹாசன், பாரதிராஜா போன்ற திரை ஜாம்பவானகளின் முன்னிலையில் பி.சி.ஸ்ரீராம்,பி.கண்ணன், ராஜிவ்மேனன் போன்ற இந்தியா கொண்டாடும் ஒளிப்பதிவாளர்களின் வாழ்த்துக்களுடன் வெளியான இந்நூலை படிக்கும் போது ஒரு சமானியன் கூட எப்படி கை தேர்ந்த ஒளிப்பதிவு நிபுணனாகலாம் என்கிற நம்பிக்கையை விதைக்கின்றது.
ப்யூர் சினிமா
7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி,
சென்னை - 600026.
தமிழ்நாடு, இந்தியா.
(விக்ரம் ஸ்டியோ எதிர்புறம்)
Mail: thamizhstudio@gmail.com
Tel:044 42164630
Mobile: 9840698236
http://www.purecinemabookshop.com
டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்பளக்ஸ், முதல் மாடி,
முனுசாமி சாலை, கே.கே.நகர்
சென்னை - 600078
தமிழ்நாடு, இந்தியா. (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
Mail: discoverybookpalace@gmail.com
Tel:044 65157525
Mobile: +91 9940446650
http://discoverybookpalace.com
CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922
Name: Gnanam Subramanian
Email: usgnanam@gmail.com
Phone: +91 99200 29901
SHARE THIS PAGE!