இமேஜ் வொர்க் ஷாப்

மனிதனுடன் ஒட்டிபிறந்த கலை ஒளிப்பதிவு என்று சொன்னால் நமக்கு சிரிப்பு வரும். ஆனால் அதுதான் ஆச்சர்யமான உண்மை. இப்பொழுது நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்கள் ஒரு கேமரா. உங்களின் அறிவு ஒரு சேகரிப்பு மையம். நீங்கள் இமைக்கும் ஒவ்வொரு வினாடியும் ஒரு காட்சியை பதிவுசெய்துகொள்கிறீர்கள். அந்த காட்சி உங்கள் அறிவில் பதிகிறது. அது என்னாளும் நினைவில் இருக்கிறது. ஒரு காட்சியோ நிகழ்வோ நாம் அசைபோடும் போதும் நினைவுகளாய் நம்முள் ஓடுகிறது. இதனால் தான் என்னவோ நம் எல்லோருக்குள்ளும் ஒளி குறித்த ஒரு அறிவும் ஆர்வமும் நிரம்பி வழிகிறது. அந்த காலத்தில் புகைப்படக்காரனையோ அல்லது ஒளிப்பதிவாளரையோ பார்த்தால் நாம் வியப்புடன் நோக்குவோம். இப்பொழுது எல்லாம் அந்த கவலையில்லை. கேமரா போன் வந்த பின்னர் எல்லோரும் ஒளி ஓவியர்கள் தான். அத்தனை துல்லியம் இல்லாமல் எடுத்தாலும் அதில் ஒரு அழகியலை புகுத்தும் ஆர்வம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கெல்லாம் ஒரு ஏக்கம் வரும். நமக்கு மட்டும் இந்த கலையை முறையாக தெரிந்தால் ?

தெரிந்தால் ?...... என்ற இந்த வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்துள்ளது. தெரிந்தால் உங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள முடியும். வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல ஒரு தொழில்முறை ஒளிப்பட கலைஞராக நீங்கள் வெற்றி கொடி நாட்ட முடியும்.

ஆனால் எங்கு செல்வது ? எப்படி கற்பது ? இதுதான் உங்களின் கேள்வியாக இருக்கும். ஊரெங்கும் பல பள்ளிகள் இருந்தாலும், நீண்ட அவகாசம் எடுத்துகொண்டு சென்று பயில்வது என்பது கொஞ்சம் சிரமம் என்று நினைக்கிறீர்களா? என்னால் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே வரமுடியும் ? இந்த அவகாசத்தில் விற்பன்னராக முடியுமா என்று கேட்டால் முடியும் என்று சொல்லவே இமேஜ் வொர்க் ஷாப்ஸ்.

நீங்கள் பள்ளிகூட மாணவராக இருக்கலாம். பல் இல்லாத தாத்தாவாக இருக்கலாம். உங்களுக்கு ஒன்றே ஒன்று இருந்தால் போதும். ஆர்வம். மற்றவற்றை இமேஜ் வொர்க் க்ஷாப் பார்த்துக்கொள்ளும். ஒளிப்பட கருவியின் அரிச்சுவடியில் இருந்து ஒளியுலகின் பிரமாண்டம் வரை எல்லாம் ஓரிடத்தில் குறுகிய குறள் போல் நச்சென்ற பாடதிட்டத்தில்.

ஒரே வரியில் சொல்வதென்றால் “எல்லோருக்கும் ஒளிப்பதிவு கலை” இதுவே இமேஜ் வொர்க் க்ஷாப்பின் நோக்கம்.

ஒளிப்படைத்த கண்ணினாய் வா ! வா ! வா !

INDIVIDUAL WORKSHOPS


We offer private Photography & Cinematography courses for individuals and small groups; ideal for novices who can’t make the group classes or for more experienced photographers who would like to get special, in-depth training in specific areas. Individual lessons shall involve practical studio shoots, location work etc., depending on your specific needs.


BASIC TO INTERMEDIATE PHOTOGRAPHY ASPECTS

  • Small, informal, and friendly classes ensure that we focus on your individual needs.
  • Learn how to see with a camera and master the fundamental aspects of Visual Composition and Lighting.
  • Get off the automatic camera modes and learn to use your camera’s creative modes intelligently and purposefully.
  • Take part in practical shoots under the guidance of a professional photographer / Cinematographer.
  • This course is ideal for beginner and enthusiast photographers who would like to step up to the next level.
  • The classes comprise of a mixture of theory and practical work and indoor/outdoor activities.


எங்களைப் பற்றி

விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்
ஓளிப்பதிவாளர் / பயிற்றுநர்

கற்றதும் பெற்றதும் யாவருக்கும் என்ற பொதுநல கோஷமுடன் களமாடும் விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒரு பன்முக திறனாளர். பெங்களுரில் சட்டப்படிப்பு படிக்கும் போதே புகைப்பட தொழில்நுட்பம், வலைப்பதிவு, வரைகலையில் கற்று தேர்ந்தார். ஓவியர், கையில் எந்த கேமாரா கிடைத்தாலும் அழகான படமெடுத்து வித்தைகாட்டும் விற்பன்னர். திரைப்பட ஒளிப்பதிவின் மீது காதல் கொண்டு பி.கண்ணன், சி.ஜே.ராஜ்குமார், சித்தார்த், துவாரநாத், எஸ்.ஆர்.கதிர் போன்றோரிடம் உதவியாளராக இருந்து கற்று தேர்ந்து 2010 முதல் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

திரைப்படம் டிஜிட்டலாக மாறிய காலக்கட்டத்தில் ஒளிப்பதிவாளராக மாறிய சூழலில் ”புகைப்படம்” எனும் அறிமுக படத்திலேயே பல்வேறு தொழில்நுட்பங்களை பரிசோதனை செய்து பார்த்து வெற்றிக்கண்டவர். தொடர்ந்து மாத்தியோசி,ஒண்டிப்புலி, தொட்டால் தொடரும், அழகு குட்டி செல்லம் என்று ஒவ்வொரு படமும் ஒரு களம். ஒளியால் உணர்வுகளை சொல்லுவதில் கெட்டிக்காரர். திரைப்படம் சார்ந்து ஒளியெனும் மொழி, போர்திரை, ஒரு ஒளிப்பதிவாளனின் பயணம் என மூன்று நூல்களை எழுதியுள்ளார் . அத்தனையும் திரைப்பட ஆர்வலர்களின் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நல்ல நூல்களை வாசிப்பது, வலைப்பூவில் திரைப்பட தொழில்நுட்பம் குறித்து எழுதுவது,பயணம் செய்வது விஜய் ஆம்ஸ்ட்ராங் பொழுது போக்கு. தான் கற்றவற்றை சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் தற்போது திரைப்பட ஒளிப்பதிவு குறித்த பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார்.

ஞானம் சுப்ரமணியன்
ஒளிப்பதிவாளர் / பயிற்றுநர்

சென்னை தரமணி அரசு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்து தங்க பதக்கம் பெற்றவர். மும்பையில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.ஒளியமைப்பில் நல்ல அனுபவம் பெற்றவர்.

ஒளிப்பதிவாளராக பல ஆவணப்படங்கள், சமுதாய பிரச்சினை சார்ந்த குறும்படங்கள், நேர்காணல்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை விழாக்கள் என பன்முக திறமை பெற்றவர்.

பத்திற்க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், பல மொழிகளில் சுமார் 700 விளம்பர படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகள் பேசக்கூடியவர்.

தேர்ந்த அனுபவமும் திரைப்பட துறையில் ஆழ்ந்த ஈடுபாடும் ஒளியமைப்பு, கேமரா பயன்படுத்தும் முறை மற்றும் தொழில் நுட்ப கருவிகளின் நுண்ணறிவும், ஒளி சார்ந்த பாடங்களின் மீதிருந்த ஆர்வமும் இவரை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக உருவாக்கியிருக்கிறது. பல வருட அனுபவங்களையும் கற்று தேர்ந்த பாடங்களையும் ஒன்றாக இணைத்து பல புதிய முயற்சிகளையும் செய்து வருகிறார். புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்.

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற"RAAJUGAARI GADHI" இவருடைய முதல் திரைப்படம் ஆகும். அமீர்கான் நடித்து வெளியான "DANGAL"திரைப்படத்தில் இரண்டாவது ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது மலையாளத்தில் "POOMARAM" எனும் படத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கலந்துக்கொண்டவர்கள் என்ன சொல்லுகிறார்கள்

  • "லைட்டிங் பிராக்டிகல் கிளாஸ் ரொம்ப யூசா இருந்துச்சு. புதிய தொழில் நுட்பங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன். என்னுடைய போட்டோ ஸ்டுடியோவில் அவுடோர் எடுக்க, இண்டோர் எடுக்க மிகவும் உதவியாக இருக்கும்"


    RAJA M
    RANI STUDIO
  • "நான் நினைத்து வந்ததை விட, அதிகமாக ஒளிப்பதிவு பற்றி தெரிந்து கொண்டேன்"

    VINCENT
    TANJAVUR
  • "மிக முக்கியமான பயிற்சி பட்டறையாக இருந்தது. அடிப்படை அவசியமென்பதை (கேமரா பற்றி) உணர செய்திருக்கிறது"

    SAMAR SUBRAMANIAN
    ERODE
  • "தமிழில் வகுப்புகள் இருந்தது மிகவும் சிறப்பாகவும், எளிமையாகவும் இருந்தது"

    VIGNESH SELVARAJ
    COIMBATORE
  • "கையாளும் முறை, செயல்படுத்தும் முறை, அமைக்கும் முறை தெறிந்து கொண்டேன். புதிய அனுபவம் கிடைத்தது. செயல்முறை விளக்கம் உபயோகமாக இருந்தது"

    JEEVANDAM G 
    COIMBATORE
  • "மிகவும் பிரயோசனமாக இருந்தது"

    LOGAKANTHAN K
    JAFFNA, SRILAKNKA
  • Amazing - எனக்கு 5C Book Full படிச்சி புரிஞ்சிக்க முடியவில்லை. இனி என்னால் அந்த புத்தகத்தை தெளிவா படிச்சு புரிஞ்சிக்கிட்டு அத என்னோட படத்துல Apply பண்ண Hope வந்திருக்கு.

    VINOD KUMAR.RJ
    CINEMATOGRAPHER
  • I can say that 'fantastic' class. I am so enjoyed, also I am expect to do practical through your guidance of workshop.

    BABU SRINIVASAN
    MEDIA PERSON - JOURNALIST
  • It was very informative & interesting. It was like a refresher course for me. 

    KOLAPPAN.S
    CINEMATOGRAPHER
  • 5Cs class எனக்கு புதுமையாகவும் பயனாகவும் இருந்தது.

    SOUNDARA PANDIYAN
    WEDDING PHOTOGRAPHER / VIDEOGRAPHER
  • This is my Third workshop of Vijay sir. Very interesting and learning a lot about photography, lighting and cinematography. Looking forward to continue to learn a lot from Vijay sir.

    BRAGADEESH
    SOFTWARE ENGINEER IN MNC COMPANY
  • Good Experience..

    INGERSOLL
    SHARE TRADER 

SHARE THIS PAGE!

CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922


Name: Gnanam Subramanian

Email: usgnanam@gmail.com

Phone: +91 99200 29901