டிசம்பர் 21. 2019 - சனிக்கிழமை
புகைப்படத்திற்கும், ஒளிப்பதிவிற்கும் ஆதாரம் எது?
ஒளிதான்.
எனில், அவ்வொளியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ள வேண்டாமா?
ஒளியைப் புரிந்துக்கொள்ள,அதன் quantity, quality, Colour பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒளியை முறையாக பயன்படுத்துவதற்கும் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான், நமக்கேற்றப்படி ஒளியைப் பயன்படுத்த முடியும். இதுவே புகைப்படத்திற்கும், ஒளிப்பதிவிற்கும் அடிப்படை.
ஜூன் 9ஆம் தேதி - குரோம் பேட்டை, சென்னை
வயது 7 முதல் 14 வரை.
இனி எல்லாமே காட்சிமொழி தான். ஏதேனும் தெரிந்துக்கொள்ள வேண்டுமனால், இணையத்தில் தேடி படிப்பது போய், யூடியூபில் தேடி பார்க்க பழகி விட்டோம். எதையும் காட்சி பூர்வமாக அணுகும் போக்கு வளர்ந்து விட்டது. ஆங்கிலம், தமிழ், இந்தி போன்று Visual யும் ஒரு மீடியமாக, ஒரு மொழியாக வளர்ந்து விட்டது. இனி எல்லாமே விஷ்வல் தான். அதன் அடிப்படை புகைப்படத்துறை.. அதை பற்றி அறிந்துக்கொள்வதும், புரிந்துகொள்வதும் அவசியம்.
கேமரா, மொபயல் போன் என எது கிடைத்தாலும் புகைப்படமும், செல்ஃபியும் எடுக்க துடிக்கும் நம்ம வீட்டு குட்டிகளுக்கு அதனை முறையாக கற்றுத்தருவோம். இது அவர்களுக்கு பல்வேறு வழிகளில் பயன்படும்.
சென்னை.- 18.05.19
அடிப்படையான லைட்டிங் எப்படி செய்வது என்பதையும் கற்றுக்கொண்டதோடு, வெவ்வேறான லைட்டிங்கில் படங்களை எடுத்துப்பார்த்தோம். கூடவே Traditional Look & Modern Look லைட்டிங் எப்படி செய்வது என்பதை பார்த்தோம். மேலும், லைட்டை எப்படி கட்டுப்படுத்துவது, எப்படி நமக்கு தேவையான படி மாற்றி அமைப்பது என்பதையும் கற்றுக்கொண்டோம்.
அதோடு மட்டுமில்லாமல், எடுத்தப் படங்களை, Adobe Lightroom & Photoshop பயன்படுத்தி எப்படி சரி செய்வது என்பதையும் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
இப்பயிற்சிப்பட்டறை முழுக்க முழுக்க Practical-ஆக இருந்தது.
Trichy - 23/04/19
‘Lighting’ என்பது புகைப்படக்கலையின் ஆதாரமான ஒன்று. ஒளியை எப்படி பயன்படுத்துவது என்பதும், அதன் பல்வேறு கூறுகளைப்பற்றியும் இப்பயிற்சி வகுப்பில் காணப்போகிறோம். ஒளியின் தன்மை, ஒளியின் அளவு, ஒளியின் வண்ணம், ஒளியின் அடர்த்து போன்றவற்றைப் பற்றியும், ஒரு தரமான புகைப்படத்திற்கு ஒளியின் அளவைப்போலவே ஒளியின் தரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் பார்க்கப்போகிறோம்.
வாழ்வின் வசந்தங்களில் ஒன்று திருமணம். எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்துவிடுகிறது. புது உறவு இணைந்திடும் அந்நாட்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் நிறைந்தது. மணமக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்திலும் பரவசமும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும் அக்கணங்களை காலத்தில் அழியா பதிவாக்கிடுவதில் புகைப்படங்களும் கானொளிகளும் முக்கியபங்காற்றுகிறது. அத்தகைய முக்கிய நிகழ்வை முறையாக பதிவு செய்திட தேவையான அடிப்படை அறிவை இவ்வகுப்பு கொடுக்கும்.
March 30th 2019 - Saturday - Chennai
ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படகாரர்கள்..இருவரும்..வெவ்வேறு வகையில் ஒளியமைப்பு செய்ய விரும்புகிறோம். தெரிஞ்சதையே திரும்ப திரும்ப செய்ய விரும்புவதில்லை. எனில், புதிய புதிய ஐடியாக்கள் எங்கே இருந்து கிடைக்கும்..!? எவ்வகையான லைட்டிங் செய்வது? எவ்வகையான வண்ணங்களை பயன்படுத்துவது? காட்சிக்கு தகுந்த வண்ணங்களை எப்படி அமைப்பது? என்று பலவேறு கேள்விகள் நமக்கு உண்டு.
இதற்கு மிக இலகுவான பதில் ஒன்று இருக்கிறது. அது..
‘ஓவியங்களை’ கவனியுங்கள் என்பதுதான்.
ஆம்.. ஓவியங்கள் தான் பல்வேறு கலைஞர்களுக்கு வழி காட்டியாக இருக்கிறது. ஓவியங்கள் தான் காட்சிப்பூர்வமான அத்தனை கலைகளுக்கும் முன்னோடி.. வழிகாட்டி..!
அது, சினிமாவாகட்டும், புகைப்படங்களாகட்டும், மேடை நாடகங்களாகட்டும், ஓவியத்துறையாகட்டும் - எல்லா துறைகளுக்கும் ஓவியத்துறையில் அபாரமான, பின்பற்றத்தக்க பல்வேறு முன்மாதிரிகள் உண்டு. அற்புதமான பல ஓவியர்கள் நமக்கு பல்வேறு பாடங்கள் தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
நான் திரைதுறைக்கு வந்த போது, ஓவியங்களின் பயனைப்பற்றியும் அதிலிருந்து, லைட்டிங், வண்ணத்தேர்வு, கம்போசிஷன் போன்றவற்றைப்பற்றி எப்படி கற்றுக்கொள்ளுவது என்பதைப்பற்றி ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன் பின் பல்வேறு ஓவியங்களை ஆழ்ந்து கவனிப்பது என் பழக்கமாயிற்று. உண்மையில் அது பேருதவி செய்கிறது.
அதைப்பற்றி தான் இந்த பயிற்சிப்பட்டறையில் பார்க்க போகிறோம். ஒரு ஓவியத்தை எப்படி அணுகுவது.. எப்படி பார்ப்பது என்று தெரிந்துக்கொள்வோம். பின்பு அது ஒரு வரமாக மாறும்.
எழுத விரும்புகிறவர்கள் நிறைய படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மொழி ஆளுமை கூடும். அது போல, புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என காட்சிமொழி சார்ந்து இயங்கும் அத்துணைப்பேரும் ஓவியங்களைக் கவனிக்க பழக வேண்டும், அப்போதுதான் அவர்களுடைய படைப்பாற்றல் வளரும்.
இந்த சிறு தலைப்புத்தான். ஆனால் கற்றுக்கொள்ள பலதும் இருக்கிறது.
வாருங்கள்.. பகிர்ந்துக்கொள்வோம்.
பயிற்சிப்பட்டறை, சென்னை - 03.02.19
Cinematographer, Co-Director, Wedding Photographer, Viscom Students, Script Writer, Commercial Photographer, Software Engineer என்று வழக்கம் போல இம்முறையும் பல்வேறு துறைச்சார்ந்த நண்பர்கள் வந்திருந்தார்கள்.
Practical Workshop என்பதனால்..
Focal Length - Depth of Focus - Depth of Field - Nodal Point - Image Plane - Shallow Focus - Circle of Confusion - Lens Breathing - Exposure Triangle - Manual Lens - Manual Focusing - F-Stop Vs T-stop - Framing - Composition - Shot Type - Depth - Movement - Perspective - Size - Contrast - Balance
என்று ஒவ்வொன்றையும் நிதானமாக செய்து பார்க்க முடிந்தது. குறைவான எண்ணிக்கை என்பதனால், one to one விவாதமாக, பரிமாற்றமாக இந்த பயிற்சிப்பட்டறை நடந்தது. எல்லாவற்றையும் ஒருநாளில் கற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால், எல்லாவற்றை பற்றி ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது என்று நம்புகிறேன். நிறைவான பயிற்சிப்பட்டறை. நன்றி நண்பர்களே..!
பயிற்சிப்பட்டறை - சென்னை - 19.01.19
Understanding the 5C’s of Cinematography பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது. வழக்கம்போல பல்வேறு துறை சார்ந்த நண்பர்கள் வந்திருந்தார்கள்.
சென்னை - 22/12/2018
புகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கான ஒளியமைப்பின் அடிப்படைகளைப்பற்றிய இப்பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவடைந்து. வழக்கம்போல பல ஊர்களிலிருந்து பல்வேறு துறைச் சார்ந்த நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள்.
Lighting -இன் அடிப்படையில் துவங்கி, வெவ்வேற சூழ்நிலைகளுக்கு எவ்வாறு ஒளியமைப்பது என்பதையும், வெவ்வேறு வகையான விளக்குகளையும், அதற்கான துணைக்கருவிகளையும் பயன்படுத்துவது எப்படி என்பதையும் செயல்முறை விளக்கமாக பார்த்தோம். கேள்விகளும் பதில்களும் என சுவாரசியமான ஒரு நாளாக அமைந்தது. நன்றி நண்பர்களே..
சென்னை - 05/08/18
சென்னை - 09/07/17
கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னையில் ‘டிஜிடல் கேமரா’ எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது. டிஜிட்டல் கேமராவின் அடிப்படைத்தொழில்நுட்பத்தை மையமாக வைத்துக்கொண்டோம். இன்று விரவிக்கிடக்கும் பல்வேறு நிறுவனங்களின் பல வகையான கேமராக்களை புரிந்துக்கொள்ளுவதற்கு, அதன் அடிப்படைத்தொழில்நுட்பத்தை புரிந்துக்கொள்ளுவது அவசியம் அல்லவா..? அதைத்தான் இப்பயிற்சிப்பட்டறையில் பகிர்ந்து கொண்டோம்.
சென்னை - 10/06/17
சென்னையில் ஒருநாள் ஒளியமைப்புப் பயிற்சிப்பட்டறை இனிதே நடந்து முடிந்தது. வழக்கம்போல பல்துறை ஆர்வலர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், புகைப்படக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், ஐ.டி துறையினர், பிஸினெஸ்மேன் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள். கேரளாவிலிருந்து மூன்று மாணவர்கள், பெங்களூரிலிருந்து இரண்டு மாணவர்கள், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், சென்னை என்று பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்திருந்தார்கள். நிறைவான அரங்கம்.
மதுரை - 30 & 31/05/17
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ‘Centre for Film & Electronic Media Studies’ மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை நடத்தினோம். வழக்கமாக எங்களுடைய பயிற்சிப்பட்டறைக்கு வருபவர்கள் பல்துறைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இம்முறை திரைக்கலையை பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள் மட்டும். அதுவும் தெளிவான மாணவர்கள். அதனால்,அடிப்படையைத்தாண்டி,கொஞ்சம் அட்வான்ஸ் பாடங்களைப் பார்த்தோம். மற்றும் எங்களுடைய திரைத்துறை அனுபவம் பற்றி பேசினோம். மற்றொரு சுவையான அனுபவம் இது.
கோயம்புத்தூர் - 27 & 28 மே 2016
இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாக இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.
சென்னை - 7 & 8 நவம்பர் 2015
இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை, நாற்பத்தி நான்கு பேர் கலந்துகொண்டார்கள். கலந்துகொண்டவர்களில், வெவ்வேறு துறை சார்ந்தவர்களும் இருந்தது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விஷுவல் கம்யுனிகேஷன் படிப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பவர்கள், கணினித் துறையில் வேலை செய்பவர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள் மட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுனர், தச்சு வேலை செய்பவர், கல்லூரி ஆசிரியர் என பலரும் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். இப்பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக நிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்தோம்.
CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922
Name: Gnanam Subramanian
Email: usgnanam@gmail.com
Phone: +91 99200 29901
SHARE THIS PAGE!