சென்னையில் ஒருநாள் ஒளியமைப்புப் பயிற்சிப்பட்டறை இனிதே நடந்து முடிந்தது. வழக்கம்போல பல்துறை ஆர்வலர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், புகைப்படக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், ஐ.டி துறையினர், பிஸினெஸ்மேன் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள். கேரளாவிலிருந்து மூன்று மாணவர்கள், பெங்களூரிலிருந்து இரண்டு மாணவர்கள், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், சென்னை என்று பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்திருந்தார்கள். நிறைவான அரங்கம்.
ஒளிப்பதிவின் அடிப்படை என்ன..? ஒளியமைப்பில் கவனிக்க வேண்டியவை எவை..? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அவற்றை எல்லாம் நடைமுறையில் சாத்தியமாக்குவது எப்படி என்பதையும் செய்முறை வகுப்பாக நடத்தினோம். அதற்காக, நாங்கள் திரைத்துறையில் பயன்படுத்தும், தொழில்முறை கருவிகளை, விளக்குகளை, அதன் துணைக்கருவிகள் அனைத்தையும் வரவழைத்திருந்தோம்.
திரைத்துறையில் பயன்படுத்தும் கருவிகள், விளக்குகள் மற்றும் அதன் வகைகள், ஒளியமைப்பில் பயன்படும் துணைக்கருவிகள், அவற்றைப்பயன்படுத்தும் முறை, என எல்லாவற்றையும் செயல்முறை விளக்கமாக செய்துக்காட்டினோம். ‘Three Point Lighting’ செய்வது எப்படி..? அதை கதையின் தன்மைக்கேற்ப வெவ்வேறு Genre-க்கு பயன்படுத்துவது எப்படி என்பதையும் பார்த்தோம். பின்பு, Single Light Source ஒளியமைப்பை செய்வது எப்படி, அதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை..? அதை நடைமுறையில் எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை சொல்லிக்கொடுத்தோம்.
மேலும், Color Psychology பற்றியும், அதை திரைப்படங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதையும், வெளிப்புற படப்பிடிப்பில், சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்வது எப்படி என்பதையும் பார்த்தோம்.
நிறைவாக, கலந்துக்கொண்டவர்களுக்கு, Image Workshop & Panasonic சார்பாக சான்றிதழ்களை வழங்கினோம். நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.
SHARE THIS PAGE!