html website templates

சிறுவர்களுக்கான புகைப்படப் பயிற்சிப்பட்டறை
குரோம் பேட்டை, சென்னை.
ஜூன் 9ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய நாள் மற்றுமொரு மகிழ்ச்சியான நாள். 


இதுவரை பல்வேறு பயிற்சிப்பட்டறைகளை நடத்தி விட்டேன். ஆயினும், இன்று ஒரு தனித்துவமான நாள். 

இதுவரை நடத்திய பயிற்சிப்பட்டறை அனைத்தும் வளர்ந்தவர்களுக்குக்கானது, இன்றைய பயிற்சிப்பட்டறை சிறுவர்களுக்கானது என்பதுதான் இன்றைய நாளை தனித்துவமானதாக மாற்றுகிறது. 

புகைப்படம், ஒளிப்பதிவு குறித்து நம்முடைய வளரும் தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருக்கிறது. காரணம், இனி எல்லாமே காட்சிமொழி தான். ஏதேனும் தெரிந்துக்கொள்ள வேண்டுமனால், இணையத்தில் தேடி படிப்பது போய், யூடியூபில் தேடி பார்க்க பழகி விட்டோம். எதையும் காட்சி பூர்வமாக அணுகும் போக்கு வளர்ந்து விட்டது. ஆங்கிலம், தமிழ், இந்தி போன்று Visual-ம் ஒரு மீடியமாக, ஒரு மொழியாக வளர்ந்து விட்டது. இனி எல்லாமே விஷ்வல் தான். அதன் அடிப்படை புகைப்படத்துறை.. அதை பற்றி அறிந்துக்கொள்வதும், புரிந்துகொள்வதும் அவசியம். 

கேமரா, மொபைல் போன் என எது கிடைத்தாலும் புகைப்படமும், செல்ஃபியும் எடுக்க துடிக்கும் நம்ம வீட்டு குட்டிகளுக்கு அதனை முறையாக கற்றுத்தருவது அவர்களுக்கு பல்வேறு வழிகளில் பயன்படும். 

பள்ளியில் நாம் கற்றுக்கொள்வது.. பகுத்தாய்வதும், புள்ளி விபரங்களை அறிந்துக்கொள்வதும். இது இடது மூளைக்கானது என்கிறார்கள்.. கலை, ரசனை, கற்பனைத்திறன் போன்றவை வலது மூளைக்கானது என்கிறார்கள். 

(The theory is that people are either left-brained or right-brained, meaning that one side of their brain is dominant. If you're mostly analytical and methodical in your thinking, you're said to be left-brained. If you tend to be more creative or artistic, you're thought to be right-brained.)

பெரும்பாலும் நம்முடைய கல்வி முறை இடது மூளைக்கானது என்பதாய் எனக்குப்படுகிறது. வலது மூளைக்கு நாம் சிறிதளவே பயிற்சிக்கொடுக்கிறோம். இதுவும் ஒரு காரணம். கலைகளை கற்றுக்கொள்வது நமது வலது மூளைக்கான பயிற்சியாக இருக்கும். 

சிறுவர்களுக்கான பயிற்சிப்பட்டறையை எங்கேயிருந்து துவங்குவது என்றி யோசித்துக்கொண்டிருந்த போதுதான், தோழர் வெற்றி அவர்கள் தன்னுடைய பிள்ளைக்கு புகைப்படமெடுக்க பயிற்சி தரமுடியுமா என்று சில மாதங்களுக்கு முன்பு கேட்டார். ஆஹா என்று உற்சாகம் ஒட்டிக்கொண்டது. செய்யலாம் தோழர் என்றேன். 

கடந்த மாதம், அதைப்பற்றி அறிவிப்பை முகநூலில் வெளியிட்டேன். அதைத்தொடர்ந்து பலரும் ஆர்வமாக தொடர்பு கொண்டார்கள். மேலும், 150 பிள்ளைகளுக்கு மேல் நடன பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் நடன இயக்குநர் திரு.வித்யாசாகர் அவர்களிடம் இதனைப்பற்றி பேசினேன். அவர் உடனே ஆர்வமாகி, நாம் செய்வோம் என்றார். அதன் தொடர்ச்சியாக் இன்று அவருடைய நடனப்பள்ளியில் பயிற்சிப்பட்டறை நடந்தது. 

ஆர்வமாக பல பிள்ளைகள் வந்திருந்தார்கள். அவர்களுடைய பெற்றோர்களும் ஆர்வமாக கலந்துக்கொண்டார்கள். 

கலை என்பது ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது என்பதனால், முதலில் ஓவியத்திலிருந்து துவங்கினோம். பிள்ளைகளை ஓவியம் வரைய சொன்னோம். அத்தனை பிள்ளைகளும் ஆர்வமாக தங்களுடைய கைத்திறமைகளை காட்டி இருக்கிறார்கள் பாருங்கள். 

பிறகு, அங்கே ஸ்டியோவில் இருப்பதில் தங்களுக்கு பிடித்ததை புகைப்படமெடுக்க சொன்னோம். தங்களை சுற்றியிருக்கும் உலகத்தை கூர்ந்து கவனிப்பதே கலைஞனின் முதல் பணி.. அங்கே இருந்தே கலை துவங்குகிறது. அவ்வகையில் பிள்ளைகளை உற்சாகமாக பல்வேறு புகைப்படங்களை எடுத்து தள்ளினார்கள். 

அடுத்துதான், இன்றைய நாளின் முக்கிய பயிற்சியான புகைப்படத்துறையைப்பற்றி, அதில் பின்பற்றப்படும் சில நுணுக்கங்களை பாடமாக நடத்த துங்கினேன். ஆச்சரியம் என்னவென்றால், சொல்லித்தந்ததை அனைத்தையும் பிள்ளைகள் அப்படியே உள்வாங்கிக்கொண்டதுதான். பெரியவர்களை விட பிள்ளை செம… 

பிறகு 10 நிமிடம் இசை மற்றும் நடனமும் ஆடினோம். வித்யா சாகர் மாஸ்டருடன் இணைந்து பிள்ளை உற்சாகமாக நடனம் ஆடினார்கள். 

பிறகு.. DSLR பற்றிய செயல்முறை பயிற்சியை நடத்தினோம். பிள்ளை ஆர்வமாக கற்றுக்கொண்டார்கள்..

தொடர்ச்சியாக, கலந்துக்கொண்டவர்களுக்கான சான்றிதழ் கொடுப்பட்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பிரிந்தோம்.


ஆஹா.. இன்றைய நாள் தான் எத்தனை நிறைவானது..!



SHARE THIS PAGE!

CONTACTS
Name: Vijay Armstrong
Email: vijayarmstrong@gmail.com
Phone: +91 98406 32922


Name: Gnanam Subramanian

Email: usgnanam@gmail.com

Phone: +91 99200 29901