ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படகாரர்கள்..இருவரும்..வெவ்வேறு வகையில் ஒளியமைப்பு செய்ய விரும்புகிறோம். தெரிஞ்சதையே திரும்ப திரும்ப செய்ய விரும்புவதில்லை. எனில், புதிய புதிய ஐடியாக்கள் எங்கே இருந்து கிடைக்கும்..!? எவ்வகையான லைட்டிங் செய்வது? எவ்வகையான வண்ணங்களை பயன்படுத்துவது? காட்சிக்கு தகுந்த வண்ணங்களை எப்படி அமைப்பது? என்று பலவேறு கேள்விகள் நமக்கு உண்டு.
இதற்கு மிக இலகுவான பதில் ஒன்று இருக்கிறது. அது..
‘ஓவியங்களை’ கவனியுங்கள் என்பதுதான்.
ஆம்.. ஓவியங்கள் தான் பல்வேறு கலைஞர்களுக்கு வழி காட்டியாக இருக்கிறது. ஓவியங்கள் தான் காட்சிப்பூர்வமான அத்தனை கலைகளுக்கும் முன்னோடி.. வழிகாட்டி..!
அது, சினிமாவாகட்டும், புகைப்படங்களாகட்டும், மேடை நாடகங்களாகட்டும், ஓவியத்துறையாகட்டும் - எல்லா துறைகளுக்கும் ஓவியத்துறையில் அபாரமான, பின்பற்றத்தக்க பல்வேறு முன்மாதிரிகள் உண்டு. அற்புதமான பல ஓவியர்கள் நமக்கு பல்வேறு பாடங்கள் தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
நான் திரைதுறைக்கு வந்த போது, ஓவியங்களின் பயனைப்பற்றியும் அதிலிருந்து, லைட்டிங், வண்ணத்தேர்வு, கம்போசிஷன் போன்றவற்றைப்பற்றி எப்படி கற்றுக்கொள்ளுவது என்பதைப்பற்றி ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன் பின் பல்வேறு ஓவியங்களை ஆழ்ந்து கவனிப்பது என் பழக்கமாயிற்று. உண்மையில் அது பேருதவி செய்கிறது.
அதைப்பற்றி தான் இந்த பயிற்சிப்பட்டறையில் பார்க்க போகிறோம். ஒரு ஓவியத்தை எப்படி அணுகுவது.. எப்படி பார்ப்பது என்று தெரிந்துக்கொள்வோம். பின்பு அது ஒரு வரமாக மாறும்.
எழுத விரும்புகிறவர்கள் நிறைய படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மொழி ஆளுமை கூடும். அது போல, புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என காட்சிமொழி சார்ந்து இயங்கும் அத்துணைப்பேரும் ஓவியங்களைக் கவனிக்க பழக வேண்டும், அப்போதுதான் அவர்களுடைய படைப்பாற்றல் வளரும்.
இந்த சிறு தலைப்புத்தான். ஆனால் கற்றுக்கொள்ள பலதும் இருக்கிறது.
SHARE THIS PAGE!